அரச ஊழியர்கள் தினமும் பணிக்கு வரலாமா? அரசாங்கம் வழங்கிய பதில்

எதிர்வரும் முதலாம் திகதி நாடு முழுமையாகத் திறக்கப்படவுள்ள நிலையில், அரச ஊழியர்களை தினமும் பணிக்கு அழைப்பது பற்றி அரசாங்கம் இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண, இன்னும் இதுபற்றி இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

இதேவேளை நாட்டை முழுமையாகத் திறப்பது பற்றி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு நாட்டில் எந்தவொரு எரிபொருள் நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

You May also like