இலங்கைக்கு வந்த தங்கப்பொதி

ஐக்கிய அரபு ராச்சியத்தில்  இருந்து  பொதிசேவை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட 220 மில்லியன் ரூபா பெறுமதியான  தங்க ஆபரணங்கள்    கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு ராச்சியத்தின் டுபாய் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திறகு  அனுப்பிவைக்கப்பட்ட  பொதியொன்று   சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று குறித்த தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளர் சுதந்த சில்வா  இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாகன உதிரிப்பாகங்கள், கோப்பி தயாரிக்கும் இயந்திரம் காணப்படுவதாக போலி வர்த்தக நாமத்தில் பெயரிடப்பட்ட குறித்த பொதிகளில் இவ்வாறு தங்க ஆபரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பொதியினை பெற்றுக்கொள்வதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ள இரண்டு நபர்களை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சுங்கதிணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May also like