கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்-முன்னெச்சரிக்கை கிடைத்ததால் பரபரப்பு

ஜாஎல போபிட்டிய புனித நிக்கலஸ் தேவாலயத்தின் மீது தீவிரவாத தாக்குதலொன்று இடம்பெறப் போவதாக அந்த தேவாலயத்தின் அருட்தந்தை ஜயந்த நிமலுக்கு இலங்கை கடற்படையினர் முன்னெச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர்.

எனினும் கிடைத்த தகவல்களில் கோளாறு இருந்ததைத் தொடர்ந்து இன்று காலை வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கையை இலங்கைகடற்படையினர் வாபஸ் பெற்றிருக்கின்றனர்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தாக்கதல் நடத்தப்படப்போவதாக கிடைத்த தகவல் மற்றும் தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட தகவல் என்பன பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு பிரிவு என்று கூறினார்.

எனினும் மீண்டுமொரு தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

You May also like