வடமாகாண ஆளுநரை சந்தித்தது இந்தியா

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ரகேஷ் நடராஜ், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸுடன் சந்திப்பை நடத்தியுள்ளார்.

வடமாகாண ஆளுநரது அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசின் உதவித்திட்டத்தின்கீழ் வடமாாகணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் சுகாதார, விவசாய உதவி நலத்திட்டங்கள் பற்றி இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

You May also like