மீண்டும் தாக்குதலா? பாதுகாப்பு செயலாளர் பரபரப்பு அறிக்கை

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் பகுப்பாய்விற்கு உட்பட்டதோ , உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல எனவும் அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வூப் பெற்ற ஜெனரால் கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.
மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் இடம்பெறப் போவதாக ஜாஎல போப்பிட்டிய தேவாலயத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதோடு அந்தத் தகவல் மீள நேற்று வாபஸ் பெறப்பட்டது.
 
இதுபற்றி ஊடகங்களுக்கு இன்று பாதுகாப்புச் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

You May also like