சுமந்திரனுக்கு எதிராக சம்பந்தனிடம் சரமாரி முறைப்பாடு செய்த பங்காளி கட்சிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உருவெடுத்திருக்கின்ற உட்கட்சி மோதல்கள் பற்றி இன்று புதன்கிழமை கொழும்பில் கூடிய விசேட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் இச்சந்திப்பு இன்று மாலை 5 மணி தொடக்கம் 6.30 வரை நடந்தது.

கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனை இக்கூட்டத்திற்கு அழைத்தால் பிரச்சினையாகும் என்ற காரணத்தால் அவர் அழைக்கப்படவில்லை என்று சொல்லப்படுகின்றது.

இதில் எம்.பிக்களாகிய செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் எம்.பி மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திப்பின்போது எம்.ஏ சுமந்திரனுக்கு எதிராகவே பல முறைப்பாடுகளை அவர்கள் சம்பந்தனிடம் முறையிட்டிருக்கின்றனர்.

இவற்றை பொறுமையுடன் அவதானித்த இரா.சம்பந்தன், அடுத்த நாடாளுமன்ற அமர்வு நடக்கின்ற சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற நாட்களில் பேச்சு நடத்தி தீர்வை முன்வைப்பதாகக் கூறினார் என சொல்லப்படுகிறது.

You May also like