கூட்டமைப்பினர் கொழும்பில் இரகசிய கூட்டத்தில்-சுமந்திரன் அவுட்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு கூட்டமைப்பிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் என்பன கடந்த நாட்களில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

ஏற்கனவே உள்வீட்டு விவகாரம் பூதாகரமாக இருந்த நிலையிலேயே மேற்படி பிரச்சினையும் பாரிய மோதலை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான பின்னணியில்தான் இன்று விசேட சந்திப்பிற்கு சம்பந்தன் தலைமையில் ஏற்பாடு இடம்பெற்றுள்ளதோடு இச்சந்திப்பு 05 மணிக்கு ஆரம்பமாகியிருக்கின்றது.

எனினும் இச்சந்திப்பிற்கு சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

You May also like