சிகரட் விலையும் கூடுகிறது!

அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் சிகரட்டுக்கான விலை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு 59.1 சதவீதமானோர் 25 ரூபாவிற்கும் மேலாக விலை அதிகரிக்க வேண்டும் என பதிலளித்துள்ளனர்.

You May also like