டட்லி சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவி?

அரலிய அரிசி நிறுவனத்தின் உரிமையாளரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான டட்லி சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று ஊடக சந்திப்பை நடத்தி கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி முஜிபுர் ரஹ்மான் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

உலகத்தில் விற்பனையாளர்கள் விலைய நிர்ணயிப்பது இல்லை. ஆனால் முதற்தடவையாக பொருட்களை விற்பனை செய்பவர்கள் பொருட்களின் விலையை நிர்ணயித்திருக்கின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உடன் பதவிவிலக வேண்டும். அப்பதவியை டட்லிக்கு வழங்க வேண்டும்” என்றார்.

You May also like