ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் விரைவில் மாற்றம்?

ஜனாதிபதியின் செயலாளராக கடமைபுரிந்துவரும் P.B. ஜயசுந்தர அப்பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவியுள்ளது.

அமெரிக்கா சென்ற ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இந்த மாற்றம் நிகழக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு ஜனாதிபதி செயலாளர் ஜயசுந்தர மாற்றப்பட்டால் அப்பதவிக்கு ஜனாதிபதியின் ஆலோசகராக உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருக்கமானவரான லலித் வீரதுங்க நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

You May also like