இந்திய – இலங்கை கடற்படைக்கு இடையே நேற்று அவசர சந்திப்பு

இந்திய இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினிடையே அந்நியோநிய உறவுகளை வளர்க்கும் நோக்கில் இருதரப்பு சந்திப்பும், பொதுவான சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கிலும் நேற்று புதன்கிழமை ஒன்லைன் மூலமான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள இலங்கை கடற்படை முகாமில் நடத்தப்பட்டது.

இதில் இந்திய கடற்படையின் உயரதிகாரிகளும் கடலோரப் பாதுகாப்பு உயதிகாரிகளும் பங்கேற்றனர்.

அதன்படி 31ஆவது வருடமாக நடத்தப்பட்ட இந்த சந்திப்பில் இந்திய கடற்படையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்பிரதேசத்திற்குப் பொறுப்பான ரியர் அட்மிரல் புனீத் ச்சாதா   (Rear Admiral Puneet Chadha – Flag Officer Commanding Tamil Nadu and Puducherry Naval Area) தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்து சமுத்திர வலயத்தில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல்கள், இருநாட்டு மீனவர்கள் இடையே இடம்பெறுகின்ற சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள், மீனவர்களின் அத்துமீறல்கள் என பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

அதேபோல இந்திய இலங்கை படையினரால் இருநாடுகளினதும் மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்படுவது பற்றியும் அவ்வாறான சம்பவங்களை தடுப்பது பற்றியும் அதிகமாக ஆராயப்பட்டன.

You May also like