பஹந்துடாவ வீடியோவில் நடித்த இருவருக்கும் நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பலங்கொடை – பஹந்துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசமாக நடந்துகொண்ட இருவருக்கும் 03 மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பலங்கொடை நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை அளித்துள்ளது.

அத்துடன் குறித்த இருவருக்கும் தலா 10800 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

காலி எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 24 வயது பெண் மற்றும் மஹரகம பகுதியை சேர்ந்த 34 வயது ஆண் ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

You May also like