தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

உலகச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1,761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

நேற்று தங்கத்தின் விலை 1757.5 அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றினால் உலக பொருளாதாரத்தின் மந்த நிலை மற்றும், டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுன் ஆகும். இது 24 கரட் சொக்கத் தங்கமாகும்

You May also like