பால்மா கன்டேனர்கள் செவ்வாயன்று விடுவிப்பு!

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருக்கின்ற பால்மா அடங்கிய கன்டேனர்களை வருகின்ற செவ்வாய்க்கிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பால்மா இறக்குமதியாளர் சங்கம் இதனை இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக இந்த கன்டேனர்கள் சிக்கியிருந்தன. எனினும் மத்திய வங்கி ஆளுநர், கன்டேனர்களை விடுவிக்க தேவையான டொலர்களை அனுமதித்திருப்பதால் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி இடப்படும் என்று பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினரான லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவிக்கின்றார்.

You May also like