தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்தார் இந்திய செயலர்

இலங்கை தமிழர் பிரதிநிதிகளை, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இன்று (04) சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை அவர் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமும், மாகாண சபை தேர்தலை முன்கூட்டியே நடத்துவதன் மூலமும், நல்லிணக்கத்தை அடைவதன் மூலமும், இந்தியாவுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய வெளிவிவகார செயலாளர் வலியுறுத்தியதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

You May also like