திருமலை எண்ணெய் கிணறு;இன்னும் இறுதி முடிவு இல்லை என்கிறது அரசு!

திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிணறுகள் பற்றி இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்வது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அங்குள்ள.இலங்கைக்கு சொந்தமான கிணறு ஒன்றை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் அவ்வாறு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த விவகாரம் ஆனாலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதாக அவர் கூறியுள்ளார்.

You May also like