நிரூபமாவின் கணவரது இரகசிய சொத்துக்கள்; அரச மட்டத்தில் இந்த வாரம் விசேட பேச்சு?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்கையான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரது இரகசிய சொத்துக்கள் பற்றி இரகசிய ஆவணம் கசிந்துள்ளதை அடுத்து அரச உயர்மட்டத்தின் கவனமும் அதன் மீது திரும்பியுள்ளது.

இந்த வாரத்தில் இதுபற்றிய விசேட பேச்சுவார்த்தை ஒன்று பிரதமர் தலைமையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேடமாக ஒவ்வொரு வாரமும் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்டோர் கொழும்பில் கூடி பேச்சு நடத்துவது வழக்கம்.

அந்த பேச்சுவார்த்தையில் மேற்படி விடயமும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளை உலுக்கிய பெனடோரா பேப்பர்ஸ் வெளியிட்ட அந்தரங்க சொத்துக்களை வைத்திருப்போரின் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனின் பெயரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like