ரோஹித அரசியலுக்கா? தந்தையின் கனவை நிறைவேற்றுவதாக அறிவிப்பு!

வடமேல் மாகாண முதலைச்சர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறப்படுகிற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ முதற்தடவையாக அது பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

மாறாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலில் குருநாகல் மாவட்ட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பை தனக்கு ஒப்படைத்துள்ளதாகவும், அவற்றை செய்யவே தான் குருநாகல் மாவட்டத்திற்கு வந்ததாகவும் ரோஹித குறிப்பிட்டுள்ளார்.

You May also like