நிரூபமா சர்ச்சை – பதறவைக்கும் மற்றுமொரு தகவல் வெளியாகியது

முன்னாள் பிரதி அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் நடேசனுக்கு சொந்தமாக சொகுசு வீடொன்று பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பன்டோரா ஆவணத்தில் இவரது இரகசிய ஆவணங்கள் பற்றிய தகவல் வெளிவந்த நிலையில், அதிலிருக்கின்ற அவுஸ்திரேலிய வீடு பற்றியே சர்வதேச செய்திச் சேவைகளில் ஒன்றான ABC பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றது.

குறித்த வீடு பற்றி நிரூபமா ராஜபக்ஷ தரப்பினரிடம் பலதடவை கேட்டபோதிலும் அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் அந்த செய்திச்சேவை மேலும் கூறியுள்ளது.

பன்டோரா ஆவணத்தின் ஊடாக 2016ஆம் ஆண்டில் நிதி முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அதனை அவர்க்ள நிராகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நிதிமுறைகேடுகள் பற்றிய வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் விசாரணைக்கும் வரவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அமைச்சரவை நேற்று பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை குறித்து விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்

குறித்து கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.

You May also like