நாடு முழுதும் மீண்டும் விரைவில் மின்தடை!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டினை எதிர்த்தே வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளரான ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இந்த தகவலைக் கூறினார்.

இதேவேளை நேற்றைய தினத்தில் நாட்டின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்ட நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மின்சார சபை ஊழியர்கள் குதித்தால் மீண்டும் நாடு மின்தடையை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

You May also like