கேஸ் விலை நிச்சயம் விரைவில் அதிகரிக்கும்?

எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க நேரிடுவதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

உலக சந்தையில் கேஸ் விலை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே கேஸ் விலை அதிகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like