சபாநாயகருக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் அவசர கடிதம்-விரைவில் திறப்பு?

நாடாளுமன்றத்தின் மக்கள் பார்வை மண்டபத்தை திறக்கும்படி நாடாளுமன்றத்திலுள்ள ஆளுங்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளது.

இதில் 40 உறுப்பினர்கள் வரை கையெழுத்திட்டிருப்பதாக தெரியவருகின்றது.

கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளில் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு பார்வையாளர் மண்டபத்திற்கு பிரவேசிக்க அனுமதிக்கும்படியும் அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று காரணமாக நாடாளுமன்றப் பார்வையாளர் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like