வெள்ளியன்று மருத்துவ ஊழியர்களும் வேலைநிறுத்தம்

08 விதமான கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

இதில் 20 விதமான சுகாதாரத் தரப்பினர் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒவ்வொரு அரச மருத்துவமனைகளுக்கு முன்பாக தாதியர்களும் மருத்துவர்களும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

You May also like