கைதிகளின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்பு-நீதியமைச்சர் அறிவிப்பு

சிறைகளிலுள்ள கைதிகளின் உயிர்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்கின்றது. அவர்களுக்கு எந்த அளவிலும் உயிர் அச்சுறுத்தல் இல்லை என்று நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றியபோது இதனைக் கூறினார்.

சபையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் முஜிபர் ரஹ்மான் ஆகியோர், அநுராதபுரச் சிறையிலுள்ள கைதிகளுக்கு உயிரச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்தனர்.

எனினும் இந்தக் கூற்றை நீதியமைச்சர் முற்றாக நிராகரித்தார்.

You May also like