என்னை காப்பாற்றுங்கள்-ரணிலுக்கு நடேசன் கடிதம்

முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனினால் 2016ஆம் ஆண்டு அப்போதிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதமொன்று அம்பலமாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை கைது செய்வதற்கு இடம்பெற்று வருகின்ற முயற்சிகளைத் தடுக்கும்படியும் தாம் எந்தக் குற்றமும் செய்யாத நிரபராதி என்றும் அக்கடிதத்தில் தொழிலதிபர் நடேசன் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருக்குமார் நடேசன் கைது செய்யப்பட்டதன் பின், பிணை பெற்றதோடு மல்வானையிலுள்ள மாளிகை பற்றி அவர் இந்தக் கடிதத்தில் முன்னாள் பிரதமருக்குத் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2016 ஒக்டோபர் 15ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்ற இந்தக் கடிதத்தில் தொழிலதிபர் நடேசன், பஸில் ராஜபக்ஷ தனக்குச் சொந்தமான காணியில் வீடொன்றை நிர்மாணித்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருப்பதை தாம் அவதானிக்கவில்லை என்றும், பின்னர் தனது பெயர் மற்றும் நன்மதிப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காணியை விற்பனை செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

You May also like