ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி அமெரிக்கா செல்கின்றார் உதய கம்மன்பில!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை கேட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதிமுதல் 22ஆம் திகதிவரை அமெரிக்காவில் நடக்கவுள்ள இந்து பசிபிக் வலய எரிசக்தி அமைச்சர்கள் பங்குகொள்ளும் 05ஆவது வருடாந்த செயலமர்வில் கலந்துகொள்ள அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்பார்க்கின்றார்.

உதய கம்மன்பில அமெரிக்கா சென்றவுடன் அப்பதவியில் பதில் அமைச்சராக டலஸ் அழகப்பெரும செயற்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்று வாங்குவது சம்பந்தமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு அதற்கெதிராக நாட்டில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ள நிலையிலேயே அமைச்சர் கம்மன்பில அமெரிக்கா செல்வது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You May also like