கொழும்பில் மற்றுமொரு சர்வதேச விமான நிலையம்

ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பு – ரத்மலான  விமான நிலையத்திலிருந்து பிராந்திய சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சு இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது.

அவ்வாறு சர்வதேச விமானப் பயணம் ஆரம்பிக்கப்பட்டால் கொழும்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட 02 சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like