விசேட சந்திப்பு நாளை;பொருட்கள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு?

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்க விசேட அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கவில்லை என்றும், பிரதமர் தலைமையில் Zoom தொழில்நுபத்தில் நடந்தது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு மேற்படி விசேட அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளதோடு அதில், சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு விலை உயர்வுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்பதா, நிராகரிப்பதா அல்லது மாற்று வழி என்ன என்பதை முடிவு செய்யவுள்ளனர்.

You May also like