12 மில்லியன் பேருக்கு முழுமையான தடுப்பூசி

நாட்டில் முழுமையாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 20 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய நாளில் மாத்திரம் 24 ஆயிரத்து 53 பேருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய நாளில் 75 ஆயிரத்து 531 பேருக்கு இரண்டாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் முழுமையாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 20 இலட்சத்து 43 ஆயிரத்து 368 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், நாட்டில் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 66 இலட்சத்து 83 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May also like