துறைமுகத்தில் தேங்கிய பால்மா நாளை விடுவிப்பு

துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள 81 சீனி கொள்கலன்களை விடுவிப்பதற்கு பெருந்தொகை கட்டணத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா நிதி இவ்வாறு கட்டணக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சத்தோச நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த கட்டண குறைப்பு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன், குறித்த சீனி கொல்களன்கள் கடந்த மூன்று மாதங்களாக துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

இதேவேளை, சீனி இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதினால் கிட்டத்தட்ட 500 கொல்களன்கள் துறைமுகத்தில் சேமித்து வைக்க்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சத்தோச நிறுவனத்துக்காக விடுவிக்க்பட்ட கொல்களன்களில் 2 ஆயிரம் மெட்ரிக்டொன் சீனி காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை  விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வணிக வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்க பெறும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்கான எழுத்துமூல ஆவணங்கள் நேற்று கையளிக்கப்பட்டதாகவும் இன்றைய தினம் நிதி கிடைக்கும் பட்சத்தில் நாளை  பால்மா தொகுதிகளை விடுவிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் 360 மெற்றிக் டன் பால்மா தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like