EXCLUSIVE;பஷில் – சுமந்திரன் கடும் வாக்குவாதம்-இன்றைய கூட்டத்தில் அமளி

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனுக்கும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக Tamil.Truenews.lk இணையத்தளத்திற்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான வழக்கு தொடுக்கப்படாமல் அவரை தொடர்ந்தும் தடுப்பில் வைத்திருப்பது பற்றி எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த சந்தர்ப்பத்தில் அரச தரப்பிடம் வினவினார்.

எதிர்கட்சிப் பக்கமாக எம்.ஏ சுமந்திரன் கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்துள்ள நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பதில் கூறியதால் இருவருக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

நிதியமைச்சராக பஸில் ராஜபக்ஷ பதவிக்கு வந்த நாளிலிருந்து இன்றுதான் முதல் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(இச்செய்தியை பிரதி எடுப்போர் Tamil.truenews.lk இணையத்தளத்தை மூலமாக குறிப்பிடவும்)

You May also like