XPress Pearl கப்பல் – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மே மாதம் தீப்பிடித்து எரிந்த நிலையில் தற்போதும் கரைக்கு அருகே காணப்படும் XPress Pearl கப்பலை விடுவிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து ட்ரைகோ நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு வந்த குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக தென்னிலங்கை கடலில் பல வளங்கள் அழிந்தன.

அதனால் ஏற்பட்ட நட்டத்திற்கு 06 இலட்சம் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக கப்பலின் நிறுவனம்வழங்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கப்பலை முற்றுகையிடும்படி துறைமுக மாஸ்டருக்கு உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், வருகின்ற 21ஆம் திகதிவரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அன்றைய தினத்தில் இந்த வழக்கில் பிரதிவாதிகள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You May also like