03 நாடுகளிடம் அரிசி கேட்க அரசாங்கம் பேச்சு!

அரிசி விலை உயர்வடைந்துள்ள நிலையில் 03 நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியா, மியன்மார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஒரு இலட்சம் மெற்றின் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் பேச்சு நடத்தியிருப்பதாக Tamil.Truenews.lk இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

எனினும் இன்றுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும் இன்று நடைபெறும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித்தீர்மானம் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, தற்போது சந்தையில் அரிசி விலை அதிகரித்திருப்பதோடு பல இடங்களிலும் தட்டுப்பாடும் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like