இலங்கை நாடாளுமன்றிலும் ஒலித்தது யொஹானியின் பாடல்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார, தற்போது உலக அளவில் பிரபலமாக வலம்வரும் இலங்கைப் பாடகி யொஹானியின் பாடலை ஒலிக்கச் செய்தார்.

மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் தற்போது இலங்கை மட்டுமன்றி உலக அளவில் பிரசித்தமடைந்திருக்கின்றது.

இந்நிலையில் இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் மூலமாக ஏற்படுகின்ற புலமைச்சொத்து சட்டம் பற்றிய விடயத்தை சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

அப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால் ஏற்படுகின்ற முன்னேற்பாட்டு நிலை பற்றி சபையில் அவர் யோசனை முன்வைத்தார்.

இலங்கைப் பாடல் ஒன்று சர்வதேச அளவில் பெயர் பெற்றிருப்பதோடு அப்படிப்பட்ட பாடல் ஒன்று இலங்கை நாடாளுமன்ற சபைக்குள் ஒலிக்கச் செய்தமை இதுவே முதற்தடவையாகும்.

You May also like