அரசை இன்று ஆட்டம்காண வைக்கத் தயாராகும் விமல் அணி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை நடைபெறும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்விக் கனைகளைத் தொடுப்பதற்கு விமல் அணி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் விமல் அணியைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு அமைச்சரது இல்லத்தில் கூடிப் பேச்சு நடத்தியிருந்தனர்.

இதில், பசளை நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கெரவலப்பிட்டி விவகாரம், திருகோணமலை எண்ணெய் கிணறுகள் விவகாரம், ஆசிரியர்கள் சம்பள உயர்வு பற்றி இந்த சந்திப்பில் கேள்விகளை எழுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

சுமார் 05 மணிநேரம் இச்சந்திப்பு தொடர்ந்ததாக சொல்லப்படுகின்றது.

You May also like