தீ விபத்து- பலியானவர்களை நினைத்து கண்ணீர்விட்ட வளர்ப்பு நாய்

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணை தற்போது நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்தவர்கள் செல்லமாக வளர்த்துவந்த நாய் தற்போது பராமரித்தவர்கள் உயிரிழந்ததை நினைத்து கண்ணீர்விட்டதாக அப்பிரதேச மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளதோடு,  விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை செல்லவில்லை என்றும் கூறப்படுகின்றது.

You May also like