வடக்கு ஆளுநராக ஜீவன் நியமனம்!

வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்

மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றி வருகின்ற நிலையில் ஜனாதிபதியினால்  குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வட மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை அவர் தற்போது வகிக்கும் பதவியை ராஜினாமா செய்து வட மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like