நடேசன் மீது இன்று விசாரணை!

சர்ச்சைக்குரிய பென்டோரா ஆவணம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும்படி குறித்த ஆணைக்குழுவினால் தொழிலதிபர் திருக்குமார் நடேசனுக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

பெரும்பாலும் அவர் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May also like