ராகலை தீவிபத்து- அதிரடியாக ஒருவர் கைது

நுவரெலியா – ராகலை முதலாம் பிரிவுத்தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடன் இதற்கு முன்னர் நெருக்கமாக இருந்தவர் எனக் கூறப்படுகின்ற ஒருவரே இவ்வாறு தலைமறைவாகியிருந்த நிலையில் கைதாகியிருப்பதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றதன் பின்னரே குறித்த நபர் தலைமறைவாகியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்திவருவதோடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் மற்றுமொரு நபரிடத்திலும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படுவதாக தெரியவருகிறது.

You May also like