நாடாளுமன்றில் கால்தடுக்கிவிழுந்த மூத்த அரசியல்வாதி

நாடாளுமன்ற அமர்வுகளின் இறுதிநாள் இன்றாகும்.

இந்த வாரம் நாடாளுமன்றத்திற்குள் தடுக்கிவிழுந்த மூத்த அரசியல்வாதி பற்றிய தகவல் Tamil.Truenews.lk இணையத்தளத்திற்குக் கிடைத்தது.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அலுவலகத்திற்குச் சென்று நேற்று முன்தினம் சந்திப்பை முடித்து அங்கிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த அரசியல்வாதியான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, படிக்கட்டுக்களில் கால்தடுக்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்த ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சிலரும், நாடாளுமன்றப் பணியாளர்களும் இணைந்து அவரை தூக்கி அமரவைத்தனர்.

எனினும் அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like