ஆசிரியர் சம்பளப்பிரச்சினை- ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி சொன்ன தகவல்

கொழும்பு நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையின் தலைமை தேரரான முருந்தெட்டுவே ஆனந்த தேரருக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

ஆசிரியர்கள் – அதிபர்களின் சமப்ளப்பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு இடையே நீண்டநேர கலந்துரையாடல் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இதன்போது கருத்து வெளியிட்டிருக்கும் ஆனந்த தேரர், 5000 ரூபா கொடுப்பனவு என்பது ஆசிரியர்கள் அதிபர்களின் நீண்டகால சம்பளப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அமையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்கு பதிலளித்திருக்கின்ற ஜனாதிபதி, அந்தத் தீர்வுக்கு அப்பாற் செல்ல முடியாத நிலைமை இருப்பதாக கூறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like