இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதற்கு முன்பாக இன்றைய தினம் காலை 9.45 மணியளவில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
கடந்த 5ம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகில் இருந்த குருநகர் மீனவர்களை தாக்க இந்திய மீனவர்கள் முயன்ற நிலையில், இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டே மீனவர் சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.

You May also like