இலங்கையில் வெறும் 9 நாட்களில் 500 கோடி ரூபாவுக்கு மது விற்பனை

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த கடந்த 21ஆம் திகித முதல் 30ஆம் திகதிவரையான காலகட்டத்தில் திடீரென திறக்கப்பட்ட மதுக்கடைகள் ஊடாக 500 கோடி ரூபா வரை விற்பனை வருமானம் பெறப்பட்டதாக கலால் வரித்திணைக்களம் தெரிவிக்கின்றது.

குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜீ. குணசிறி இதனைத் தெரிவிக்கின்றார்.

அதேபோல கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலக்டத்தில் சட்டவிரோத மது உற்பத்திகளை செய்த சுமார் 20261 இடங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவற்றை செய்த முப்பதாயிரம் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

மேலும் ந்த 09 மாதங்களில் பல்வேறு போதைப்பொருளுடன் தொடர்புடைய 2765 பேர் கைதாகியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like