பன்டோரா சர்ச்சை- அடுத்தகட்டம் பற்றி அமைச்சர் வழங்கிய தகவல்

பன்டோரா ஆவணத்தின் ஊடாக அம்பலமாகிய சில விடயங்கள் பற்றி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தரப்பு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளையின்படி தற்சமயம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை நடத்திவருவதோடு தொழிலதிபர் திருக்குமார் நடேஷனிடம் வாக்குமூலத்தையும் ஆணைக்குழு பெற்றது.

இந்நிலையில் ஆணைக்குழுவின் விசாரணை தீர்ந்தவுடன் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்றும் அதன் பின்னரே அரசாங்கத்தின் அடுத்தகட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என அரசாங்கத்திலுள்ள மூத்த அமைச்சர் ஒருவர் Tamil.Truenews.lk இணையத்தளத்திற்கு இன்று தெரிவித்தார்.

You May also like