இந்திய இராணுவப் பிரதானி அடுத்தவாரம் இலங்கைக்கு?

இந்திய இராணுவத் தளபதியும் படைப்பிரதானியுமான ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவன எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் படைப்பிரதானி ஆகியோரது அழைப்பினை ஏற்றே அவர் இநத விஜயத்தை செய்கின்றார்.

விஜயத்தினிடையே இராணுவத் தளபதி, ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

அதேபோல அவர் இலங்கையில் தங்கியிருக்கின்ற 05 நாட்களில் இலங்கை – இந்திய இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற மித்ரா சக்தி போர்ப் பயிற்சிகளையும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like