இலங்கையர்களுக்கு அமெரிக்கா செல்ல தடையா?

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கோவிட் தடுப்பூசியைப் பெற்றவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய உற்பத்தியாகிய ஸ்புட்னிக், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாதிருப்பதே இதற்கான காரணமாகும் என்று அமெரிக்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர, எஸ்ட்ரா செனிகா, மொடர்னா, பைஸர் மற்றும் சைனோபார்ம் உள்ளிட்ட தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் இதுவரை 160000 ஆயிரம் பேர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியைப் பெற்றிருப்பதால் அவர்களுக்கும் அமெரிக்கா செல்ல முடியாமற் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like