திங்களன்று பிரதமருடன் ஆசிரியர்கள் இறுதிப்பேச்சு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நாளை மறுநாள் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

இச்சந்திப்பு அலரிமாளிகையில் திங்கட்கிமை பிற்பகலில் நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

21ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், தீர்வு தரும்வரை பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்லமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

You May also like