பல்கலை மாணவர்களுக்கு 11ம் திகதி கோவிட் தடுப்பூசி!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி  வழங்கும் திட்டம்  எதிர்வரும்  11 ஆம் திகதி  முதல்   ஆரம்பிக்கப்படவுள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்

இதன்படி  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  மற்றும் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடி  இந்த  திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

You May also like