தடுப்பூசி போடாத பயணிகள்; பஸ்சிலிருந்து இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு

இந்தியா – வேலுார் பஸ் ஸ்டாண்டில் தடுப்பூசி போடாத பயணிகளை பஸ்சில் இருந்து அதிகாரிகளால் இறக்கி விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பஸ்களில் முகக்கவசம் அணிந்தவர்களை மட்டும் பயணம் செய்த அறிவுறுத்தினர். தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? என ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, வேலுார் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் தலைமையில் வேலுார் பஸ் ஸ்டாண்டில் இன்று ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த பஸ்களில் ஏறி பயணிகளிடம் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளீர்களா? என கேட்டு அதற்கான சான்றுகளையும் சரி பார்த்தனர்.

அதில், தடுப்பூசி போடாத பயணிகள் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கி அங்குள்ள சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுத்தினர்.

‛‛கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 120 பயணிகள் பஸ்சில் இருந்து இன்று இறக்கி விடப்பட்டனர். இதில், பாதி பேர் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்,” என வேலுார் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May also like