ரிஷாட் குறித்து சபாநாயகருக்கு சென்ற கடிதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியூதீன் மீது உள்ள குற்றச்சாட்டு என்ன என்பதை சபைக்கு அறிவிக்கும் படியும் குற்றச்சாட்டு இல்லாவிட்டால் விடுதலை செய்யுமாறும் கோரியே இவ்வாறு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

 

You May also like